BREAKING சசிகலாவை வரவேற்று போஸ்டர்.. கடுப்பான அதிமுக தலைமை.... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை..!

Published : Jan 29, 2021, 02:19 PM IST
BREAKING சசிகலாவை வரவேற்று போஸ்டர்.. கடுப்பான அதிமுக தலைமை....  ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை..!

சுருக்கம்

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்ததால் அதிமுகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி அதிரடியாக நீக்கப்பட்டுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். 

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்ததால் அதிமுகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி அதிரடியாக நீக்கப்பட்டுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். 

சசிகலா சிகிச்கை முடிந்து தமிழகம் திரும்ப உள்ளார். அப்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க, அவரின் ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஆங்காங்கே அதிமுக உறுப்பினர்கள் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் அடித்து வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் அதிமுக சார்பில் சசிகலாவை வரவேற்று திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் 33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என்று எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்  கழகத்தின் கண்ணியத்திற்கு தாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த புலியூர் அண்ணாதுரை அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி, மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். 

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம் என அதிமுக தலைமை கூறியுள்ளது. ஏற்கனவே நெல்லை அதிமுகவை சேர்ந்த சுப்ரமணியராஜாவை கட்சியிலிருந்து அதிமுக தலைமை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!