அடுத்த பத்து ஆண்டுகள் நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த காலம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதை நாம் சரியாகப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த பத்து ஆண்டுகள் நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த காலம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதை நாம் சரியாகப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2021 மற்றும் 2021 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 15ஆம் தேதி நிறைவடைகிறது. பின்னர் அதன் மீதான விவாதம் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நீடிக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் மிகுந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நாட்டின் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இந்திய பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதை சரி கட்டுவதற்கான பட்ஜெட்டாக இது அமைய வேண்டும் என்பதே அந்த சவால் ஆகும்.
undefined
கொரோனா தொற்று எதிரொலியாக வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த ப்டஜெட் அமையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டம் தொடங்கியது. பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த பத்தாண்டுகள் மிகவும் முக்கியமான காலமாகும், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான பிரகாசமான பொன்னான தருணம் அமைந்துள்ளது. நமது நாட்டின் சுதந்திரப் போராளிகளின் கனவுகளை விரைவாக நிறைவேற்ற இந்த பொன்னான வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த 10 ஆண்டை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் நாட்டின் வளர்ச்சி தொடர்பாக நிறைய விவாதங்கள் செய்யப்படவேண்டும். பல்வேறு தரப்பட்ட சிந்தனைகளும் இங்கு ஒன்று கலக்க வேண்டும். ஜனநாயகத்தின் அனைத்து மரபுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றி செயல்பட வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளின் முதல் கூட்டத் தொடரில் இன்று நாம் அடியெடுத்து வைக்கிறோம். நமது பங்களிப்பு மக்களின் எதிர்பார்ப்பை விட குறைவான அளவில் இருந்துவிடக்கூடாது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 4 முதல் 5 மினி பட்ஜெட்டை நமது நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். அதேபோன்ற பட்ஜெட்டை 2021 ஆம் ஆண்டிலும் அவர் தாக்கல் செய்வார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.