அடேங்கப்பா இது வேற லெவல் ஐடியாவா இருக்கு.. ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி சசிகலாவுக்கு வரவேற்பு.. முன்னாள் MLA..!

By vinoth kumarFirst Published Feb 4, 2021, 1:57 PM IST
Highlights

பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என குடியாத்தம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் மாவட்ட ஆட்சியரிடம் அனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என குடியாத்தம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் மாவட்ட ஆட்சியரிடம் அனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூருவில் ஓய்வில் இருந்து வரும் சசிகலா பிப்ரவரி 7ம் தேதி சென்னை வர உள்ளார். அப்போது, தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகளை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்துவருகிறார். பெங்களூருவில் இருந்து நேராக சசிகலா சென்னை செல்கிறார். அப்போது, ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் சசிகலாவுக்கு அமமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அமமுக நிர்வாகிகளுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், வேலூர் மாவட்ட எல்லையான மாதனூரில் சசிகலாவுக்கு அமமுக அமைப்பு செயலாளர் ஜெயந்தி பத்மநாபன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெயந்தி பத்மநாபன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் நேற்று மனு ஒன்று அளித்தார். அதில், சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வருவதை முன்னிட்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. என்ற முறையில் மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்க உள்ளேன்.

அப்போது காலை 11 மணி முதல் 1 மணி வரை தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவி வரவேற்பு அளிக்க தேவையான அனுமதியை வழங்க வேண்டும் அதில் கூறியுள்ளார். இதனால்,  மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அதிர்ச்சியடைந்துள்ளார். சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!