ஓட்டுமொத்த திருடர்களும் பாஜகவில் போய் குவிகின்றனர்... கொந்தளித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா...!

Published : Feb 04, 2021, 01:37 PM IST
ஓட்டுமொத்த திருடர்களும் பாஜகவில் போய் குவிகின்றனர்... கொந்தளித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா...!

சுருக்கம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஊழல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஊழல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். 

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். இதனால், அக்கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்துள்ளார். சமீபத்தில் பேசிய அமித்ஷா, திரிணாமுல் காங்கிரசின்  முக்கிய பிரமுகர்கள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து வருகிறார்கள். தேர்தல் சமயத்தில் அந்தக் கட்சியில் முதல்வர் மம்தா மட்டுமே இருப்பார் என்று விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில், மேற்குவங்கத்தின் அலிபுர்துவாரில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி;- கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம். பாஜகவால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின், உண்மை விசுவாசிகளை விலைக்கு வாங்க முடியாது. அனைத்து திருடர்களும், ரவுடிகளும் பாஜகவில் இணைகிறார்கள். அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பார்கள் என்று கூறுகின்றனர். 

நீங்கள் ஒருபோதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க முடியாது. பாஜக ஒரு வாஷிங் மெஷின். ஊழல் நிறைந்தவர்கள் அங்கு சேர்ந்து சுத்தமானவர்களாக வெளியே வருகிறார்கள் என்றார். மேலும், எனக்கு நிறைய புகார்கள் வருகிறது. விசாரித்து வருகிறோம். சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது என்று  மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!