அடுத்த ஏழு, எட்டு ஆண்டுகளில் இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த 130 பில்லியன் டாலர்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி.

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2021, 1:16 PM IST
Highlights

அடுத்த 7-8 ஆண்டுகளில் இந்தியா 130 பில்லியன் டாலர்களை இராணுவ நவீனமயமாக்கலுக்கு செலவிட திட்டமிட்டுள்ளது என்றார். "நமது பாதுகாப்பு கட்டமைப்பை  வலுப்படுத்த நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறோம். 

அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த சுமார் 130 பில்லியன் டாலர் செலவு செய்ய  திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பல முனைகளிலிருந்து இந்தியா அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்தித்து வரும் நிலையிலும் அவைகளை முறியடிக்க இந்தியா விழிப்புடனும் தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார். 

நாட்டின் முதன்மையான விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியாவின் 13 வது பதிப்பு, கோவிட் -19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் புதன்கிழமை பெங்களூரிலுள்ள எலஹகா  விமானப்படை தளத்தில் தொடங்கியுள்ளது. இதை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது.  இதில் மொத்தம் 540 வெளிநாட்டு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள விண்வெளி பயன்பாட்டிற்கான நவீன கண்டுபிடிப்புகள்,  இந்திய பாதுகாப்பு துறையின் பொது நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்திகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:  

அடுத்த 7-8 ஆண்டுகளில் இந்தியா 130 பில்லியன் டாலர்களை இராணுவ நவீனமயமாக்கலுக்கு செலவிட திட்டமிட்டுள்ளது என்றார். "நமது பாதுகாப்பு கட்டமைப்பை  வலுப்படுத்த நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்துவுகிறோம். பெரிய மற்றும் சிக்கலான பாதுகாப்பு தளங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இப்போது 'ஆத்மனிர்பர் பாரத் அபியான்' எங்கள் கொள்கையின் மையமாகவே மாறியுள்ளது, ”என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். "தன்னம்பிக்கை மற்றும் ஏற்றுமதியின் இரட்டை இலக்குகளை அடைய, 2024 ஆம் ஆண்டளவில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளில் ரூ .35,000 கோடி ஏற்றுமதி உட்பட ரூ .1,75,000 கோடி விற்பணை செய்ய இலக்கை நிர்ணயித்துள்ளோம்" என்று சிங் கூறினார். 

பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பாதுகாப்புத் துறையில் அரசு அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாகவும், அரசாங்க பாதை வழியாக 100 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளதாக சிங் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையில் இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடுகளில் ஒன்றாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு என்றார்.  

பல முனைகளிலிருந்து இந்திய அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்தித்து வருகிறது, ஆனால் எந்தச் சவாலையும், அச்சுறுத்தலை முறியடிக்க இந்தியா தயாராக உள்ளது என்றார். இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் எம்.கே1-ஏ ரக போர் விமானங்களை தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்திற்கு 48,000 கோடி மதிப்பு பணம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனேகமாக மேக் இன் இந்தியா திட்டத்தில், பாதுகாப்பு துறைக்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.  இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!