6 மாதம் சிறை, ரூ.5000 அபராதம்... சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்..!

By vinoth kumarFirst Published Feb 4, 2021, 12:29 PM IST
Highlights

அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்யப்பட்ட நிலையில் சட்டமாக்குவதற்காக மசோதாவை  சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்யப்பட்ட நிலையில் சட்டமாக்குவதற்காக மசோதாவை  சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து வருவதாகவும், இதனால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து, கடந்த 21ம் தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட மசோதா என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  

இந்த அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், சட்டமாக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 5000 அபராதம் மற்றும் 6 மாதங்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆன்லைன் சூதாட்ட அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு 10,000 அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!