சசிகலாவுடன் இணைக்கப்படும் ஓ.பி.எஸ்- எடப்பாடி... ஓரங்கட்டப்படும் டி.டி.வி.தினகரன்..!

Published : Feb 04, 2021, 12:27 PM IST
சசிகலாவுடன் இணைக்கப்படும் ஓ.பி.எஸ்- எடப்பாடி... ஓரங்கட்டப்படும் டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கும் போஸ்டர்கள் அதிகரித்து வருகிறது. போஸ்டர் அடித்து வரவேற்கும் அதிமுகவினர் டி.டி.வி.தினகரன் புகைப்படத்தை தவிர்த்து ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் ஆகியோரது புகைப்படங்களையும் சசிகலா படத்துடன் சேர்த்து அச்சடித்து ஒட்டி வருகின்றனர்.  

சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியதால், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் சுப்பிரமணிய ராஜா. ஆனால் நீக்கப்பட்ட சுப்பிரமணிய ராஜாவோ, அமைச்சர்கள் சிலர் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் சசிகலாவை ஆதரித்துப் பேசியபோது அவர்கள் மீது கட்சி நடவடிக்கை இல்லை, சாதாரணப் பொறுப்பாளரான என் மீது நடவடிக்கையா என்று கேள்வியெழுப்பினார்.இதையடுத்து அ.தி.மு.க.வின் தொண்டர்கள் சிலர் சசிகலாவை வரவேற்றுப் போஸ்டர் அடித்தபோதும், கட்சித் தலைமை அவர்களை நீக்கியது தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தென் மாவட்டத்தின் நெல்லை, தென்காசி மாவட்டப் பகுதிகளில் குறிப்பாக, பனவடலிசத்திரம் பகுதியில், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். படங்களுடன் சசிகலாவை வரவேற்று அந்தப் பகுதியின் பொறுப்பாளரான பெருமாள் சாமி, அய்யாத்துரை, முருகன் ஆகியோர் இணைந்து, 'தவ வாழ்க்கை வாழ்ந்த தியாகியே. அ.தி.மு.க.வின் தலைவியே. எதிரியை வீழ்த்த வரும் வீரமங்கையே வருக வருக வருக' என்று வாழ்த்திப் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது நெல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டர்கள் மூலம் டி.டி.வி.தினகரன் அதிமுகவில் தலையிடக்கூடாது என அதிமுகவினர் உணர்த்துவதாகவே தெரிவிகிறது.
 
PREV
click me!

Recommended Stories

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல்..! சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசு..! களத்தில் இறங்கிய அதிமுக..!
திருவனந்தபுரத்துக்கு நன்றி.. கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை.. பிரதமர் மோடி பெருமிதம்!