ஏற்கனவே தேர்வெழுதி தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. முதல்வரிடம் கதறும் ஆசிரியர் சங்கம்..

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2021, 11:29 AM IST
Highlights

இந்நிலையில் கடந்த 29.01.2021. அன்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை  1:2 சான்றிதழ் சரிபார்த்து முடிக்கப் பட்டோர்  சந்தித்து 2019 -2020 கல்வியாண்டிற்கான பணியிடங்களை அவர்கள் கேட்டபோது அப்பணியிடங்கள் பின்னடைவுப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு மறுபடியும் தேர்வு வைத்தே நிரப்பப்படும் என கூறுவது வருத்தத்தையளிக்கிறது. 
 

சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலைப் பட்டதாரிகளுக்கு பணிவழங்கிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- ஆசிரியர்த் தேர்வு வாரியத்தால் கடந்த 2018-2019 ஆண்டிற்கான 2144 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு  நேரடி நியமனத் தேர்வுக்கான அறிவிப்பு 12.06.2019. அன்று அறிவிக்கப்பட்டு 28.09.2019,  29.09.2019 ஆகிய நாள்களில் தேர்வு நடத்தப்பட்டன. அத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைத்து சரிபார்த்தது.

பின்பு தேர்ச்சி பெற்றோருக்கானப் பட்டியலை 20.11.2019 நாள் அன்று சில பாடங்களுக்கும்,  02.01.2020 நாளன்று சில பாடங்களுக்கும் ஆசிரியர்த் தேர்வு வாரியம் வெளியிட்டது.  அவர்களுக்குப் பணி ஆணை பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்பட்டது.  அதில் அடுத்துள்ள நிலையில் உள்ள பிற தேர்வர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கவில்லை.  

அப்பொழுது பள்ளிக்கல்வித் துறையை அணுகியபோது 2019-2020 கல்வியாண்டிற்கான பணியிடங்களை நிரப்பிட இரண்டாம் பட்டியல் கேட்டிருப்பதாகவும், ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதம் செய்வதாகவும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பதில் கூறினார். அந்நாளிலிருந்து  1:2. அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் தங்களை வைத்து நிரப்பப் பட வேண்டும்  என்று தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அரசிடம் வலியுறுத்திவருகின்றோம். பள்ளிக்கல்வித்துறை அரசாங்தத்திடமிருந்து முறையான ஆணை வந்தால் உங்களுக்கான பணி வழங்குவதில் தடையில்லை என்கிறது,  ஆனால் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் கடந்த பத்து மாதங்களாக அலைகழிக்கப்படுவது  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.மேலும்  தகவல் அறியும்  சட்டத்தின்  மூலமாக 2019 -2020 கல்வியாண்டிற்கான பணியிடங்கள் 1910 பணியிடங்கள் உள்ளன . தற்பொழுது பள்ளிக்கல்வித் துறையால் 1500 மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான பணிநாடுநர்களை எடுத்துத் தரும்படி ஆசிரியர்த் தேர்வு வாரியத்திடம் கேட்டுள்ளது. 

அந்தப் பணியிடங்களை தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிபார்த்து காத்திருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகிறது.இந்நிலையில் கடந்த 29.01.2021. அன்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை  1:2 சான்றிதழ் சரிபார்த்து முடிக்கப் பட்டோர்  சந்தித்து 2019 -2020 கல்வியாண்டிற்கான பணியிடங்களை அவர்கள் கேட்டபோது அப்பணியிடங்கள் பின்னடைவுப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு மறுபடியும் தேர்வு வைத்தே நிரப்பப்படும் என கூறுவது வருத்தத்தையளிக்கிறது. 

மேலும் கொரோனா தொற்றுக் காலங்களில் தனியார்ப் பள்ளிகளிலிருந்து அரசுப்பள்ளிகளுக்கு  +1 , +2 மாணவர்ச் சேர்க்கை அதிகரித்து இருப்பதாலும், கடந்த பத்து மாதங்களாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு இருப்பதாலும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் தேவை  அதிகம் இருப்பதாலும், மாணவர் நலனைக் கருத்தில் கொண்டும்,  வாழ்வாதரம் இழந்து தவித்துக் கொண்டிருக்கும்  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விரைவில் பணிநியமனம் வழங்கிட முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் ஆணை பிறப்பித்து அதனை சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவழங்கி வாழ்வளிக்கவேண்டி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.  என அதில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!