இவ்வளவு நடந்தும் அடங்காத கனிமொழி, திருமாவளவன் .. டெல்லி எல்லையில் தடுத்த போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2021, 1:51 PM IST
Highlights

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திப்பதற்காக 10 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15 எம்பிகள் டெல்லியில் இருந்து பேருந்து மூலம் காசிபூர்  புறப்பட்டு சென்றனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், ரவிக்குமார், சு. வெங்கடேசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  

வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை சந்திக்க சென்ற 10 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15 எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் முற்றுகையிட்டு விவசாயிகள் கடந்த 2 மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டம் நடத்திவரும் உ.பி எல்லையான காசிபூரில் தொடர்ந்து விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் அவர்கள் டெல்லிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக, உயரமான தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திப்பதற்காக 10 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15 எம்பிகள் டெல்லியில் இருந்து பேருந்து மூலம் காசிபூர்  புறப்பட்டு சென்றனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், ரவிக்குமார், சு. வெங்கடேசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த எம். பி ஹர்சிம்ரத் கவுர், மற்றும் மல்லிகார்ஜுன  கார்கே, சுப்ரியா சுலே,  சுகதா ராய் உள்ளிட்டோரும் அதில் இடம்பெற்றிருந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் முன்கூட்டியே அவர்கள் காசியாபாத் எல்லையை அடைந்ததும் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒருவேளை அவர்கள் விவசாயிகளை சந்திக்கும் பட்சத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக அவர்களை போலீசார் தடுத்தனர். விவசாயிகளை சந்திக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் போலீசார் சூழ்நிலை கருதி அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

click me!