மணல் கடத்துவோருக்கு ஆப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

By T BalamurukanFirst Published Sep 3, 2020, 7:38 PM IST
Highlights

முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது. எனவே, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.

இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், "ஒவ்வொரு நாளும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகிறது. மணல் கடத்தல்காரர்களால் தான் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது. எனவே, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடியாக தெரிவித்தார்.

click me!