பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், விழாவில் கருப்பு சட்டை, செல்போன் கொண்டு வர தடை விதக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநருக்கு எதிராக போராட்டம்
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார். இந்தநிலையில் தமிழ்நாட்டிற்க்கு எதிராகவும், மனித குலத்திற்கே எதிரான சனாதன தர்மத்தின் பரப்புரையாளராகவும் செயல்பட்டு வரும் தமிழ் நாட்டு ஆளுனர் ஆர்.என்.ரவியே திரும்பிப் போ எனும் முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் , பெரியார் பல்கலை கழகம் அருகில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது.இதே போல கம்யூனிஸ்ட் கட்சியும் கருப்பு கொடி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கருப்பு சட்டைக்கு தடை
இந்த அறிவிப்பால் சேலம் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ரவி பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என மாநக காவல்துறை பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்திருந்தது. இதனையடுத்து பலகலைக்கழக பதிவாளர் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் கருப்பு சட்டை அணியகூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கை பேசி கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கிய தேர்தல் ஆணையம்.! சென்னைக்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள்