பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுப்போம்... விசிக தேர்தல் அறிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Mar 25, 2021, 12:05 PM IST
Highlights

விசிக தேர்தல் அறிக்கை மூன்று பாகங்களாக கொள்கை அறிக்கை, உறுதி மொழிகள், வாக்குறுதிகள் என வடிவமைக்கப்பட்டுள்ளது. 

விசிக தேர்தல் அறிக்கை மூன்று பாகங்களாக கொள்கை அறிக்கை, உறுதி மொழிகள், வாக்குறுதிகள் என வடிவமைக்கப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘’இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழிக்க தனியார்மய படுத்துவதை ஊக்குவிக்கும் பாசிச பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புக்களின் நடவடிக்கைகள் தடுப்போம். மொழிவழி தேசியம், மாநில உரிமைகள், மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றை பாதுகாத்து அரசியலமைப்பு சட்டம் முன்மொழியும் கூட்டாசி முறையைப் பாதுகாப்போம்.

எட்டு வழி சாலையை முற்றாக தடுத்து நிறுத்த போராடுவோம். கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை கட்டணமின்றி வழங்குவோம். நீதித்துறையில் BC/MBC/SC/ST பெண்கள் போன்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்திட விசிக வலுயுறுத்தும். மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க போராடுவோம்.

 

திமுக ஆட்சிக்கு வந்ததும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் நாட்டில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு தொடர்ந்து நீடித்திட பாடாற்றுவோம். உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட விசிக வலியுறுத்தும்’’எனக் கூறப்பட்டுள்ளது.
 

click me!