குஷ்பு சினிமா ஸ்டாரா இருக்கலாம், ஆனால் எழிலன் அரசியல் ஸ்டார்.. ஆயிரம் விளக்கில் திருமாவளவன் ஆவேசம்..

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2021, 11:55 AM IST
Highlights

ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி செயலாளர் அகஸ்டின் பாபு, மற்றும் தோழமை கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். அப்போது பேசிய அவர், கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் கலைஞரின் பிள்ளையாக, 24 மணி நேரமும் கலைஞர் உடன் இருந்து சேவை ஆற்றியவர் எழிலன்.

பாஜக ஒரு போதும் தமிழகத்தில் கால் ஊன்றவும் கூடாது, வேல் ஊன்றவும் கூடாது. என்பதே திமுக தலைமையிலான அனைத்து கட்சிகளின் எண்ணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆயிரம் விளக்கு சட்ட மன்ற வேட்பாளர் நா.எழிலன் (திமுக) ஆதரித்து கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் MP அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி செயலாளர் அகஸ்டின் பாபு, மற்றும் தோழமை கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். அப்போது பேசிய அவர், கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் கலைஞரின் பிள்ளையாக, 24 மணி நேரமும் கலைஞர் உடன் இருந்து சேவை ஆற்றியவர் எழிலன். 

குஷ்பு சினிமா ஸ்டாரா இருக்கலாம், ஆனால் எழிலன் அரசியல் ஸ்டார். எழிலன் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு இருந்தாலும், நாம் உழைக்க வேண்டும். திமுக வெற்றி எண்ணிக்கை 21லில் இருந்து தொடங்குகிறது. பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது. அதிமுக என்ற பெயரில் பாஜக தான் இங்கு அரசியல் செய்கிறது. அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு எல்லாம் பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு அதிமுக கூட்டணி பாசிச கூட்டணி, திமுக தலைமையிலானது ஜனநாயக கூட்டணி. பாஜக ஒரு போதும் தமிழகத்தில் கால் ஊன்றவும் கூடாது, வேல் ஊன்றவும் கூடாது. திமுக தலைமையிலான அனைத்து கட்சியின் எண்ணமும் அது தான். 

பாஜக ஒரு போதும் இட ஒதுக்கீடு, சம உரிமை பற்றி பேசியது கிடையாது. மதவெறி அரசியல் பற்றி மட்டும் பேசும் கட்சி பாஜக. இந்துகளை அதானியிடம் அடக்கு வைக்கும் கட்சி தான் மோடி கட்சி. அதானி மோடியின் பினாமி. எழிலனிடம் எந்த ஜாம்பவானும் கொள்கை ரிதியாக போட்டியிட முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரை மையப்படுத்தியே 50 ஆண்டு கால ஆட்சி நடந்தது. ஜனதான கட்சிகள் தமிழகத்தில் அடியெடுத்து வைக்க கூடாது, தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமர வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக தலைமையிலான கூட்டணியை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். என தெரிவித்தார்.
 

click me!