தயாநிதிமாறன் மீது அமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கு.. விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி..

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2021, 11:41 AM IST
Highlights

பல தடைகளைத் தாண்டி படித்துவரும் மாணவர்களின் கனவுகளை அரசு கேலிக்கூத்தாகி வருகிறது' என்றும் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்த  திமுக எம்.பி. தயாநிதி மாறன், 'அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், 

பல தடைகளைத் தாண்டி படித்துவரும் மாணவர்களின் கனவுகளை அரசு கேலிக்கூத்தாகி வருகிறது' என்றும் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன் இந்த வழக்கு தொடர அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை என்றும் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும், எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ் குமார் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியலில் ஈடுபட்டதாக சேத்துப்பட்டு காவல் நிலைத்தில் தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தயாநிதிமாறன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கும் நீதிபதி சதீஷ் குமார் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

click me!