போதும்டா சாமி உங்க சகவாசம்.. அதிமுகவில் இருந்து விலகிய சிட்டிங் எம்எல்ஏ.. அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Mar 25, 2021, 11:06 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரையிலான வாக்குகளை அமமுக பிரிக்கப் போகிறது. ஆகையால், அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது. 

கட்சி பொறுப்பில் இருந்து அதிமுக எம்எல்ஏ ரத்தனசபாபதி அதிரடி விலகிய சம்பவம் அக்கட்சியின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது அமமுகவில் இணைந்து அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி செயல்பட்டார். பின்னர், பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி மீண்டும் முழு பலத்துடன் அதிமுக ஆட்சி தொடர்ந்ததையடுத்து, அதிமுகவில் மீண்டும் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

இந்நிலையில், மீண்டும் அறந்தாங்கி தொகுதியை ரத்தினசபாபதி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.  இதனால் கடும் அதிருப்தியில் இருந்ததோடு, அறந்தாங்கி தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் ராஜநாயகத்துக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் விதமாக ரத்தினசபாபதிக்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவி நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.. இவருடன் சேர்த்து மாவட்டத்தில் அதிருப்தி வெளிப்படுத்திய பலருக்கும் பதவிகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிமுக எம்எல்ஏ ரத்தனசபாபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அதிமுகவில் பதவியில் இருப்பதைவிட தொண்டராகவே இருக்கே விரும்புகிறேன். ஆகையால்தான் தற்போது வழங்கிய தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவு எடுத்துள்ளேன்.

சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரையிலான வாக்குகளை அமமுக பிரிக்கப் போகிறது. ஆகையால், அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது. நான் ஏற்கெனவே கூறியபடி அதிமுக, அமமுக இணைந்திருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டு இருக்காது என ரத்தனசபாபதி தேனையுடன் தெரிவித்துள்ளார்.

click me!