குட்நியூஸ்... பிரேமலதாவுக்கு கொரோனா நெகட்டிவ்.. தேமுதிக நிம்மதி..!

By vinoth kumarFirst Published Mar 25, 2021, 11:56 AM IST
Highlights

தேமுதிக பொருளாளரும், விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தேமுதிக பொருளாளரும், விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கட்சியின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த 18ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பிரேமலதாவின் சகோதரரும், தேமுதிக துணைச் செயலாளருமான எல்.கே.சுதீஷ் உடனிருந்தார்.

இதனையடுத்து, தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷுக்கு கொரோனா உறுதியானது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சதீஷின் மனைவி பூர்ணிமாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இருவருடனும் பிரேமலதா தொடர்பில் இருந்ததால் அவரும் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. அத்துடன் நிற்காமல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த இடத்திலேயே பிரேமலதாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவக் குழுவினர் முயற்சித்தது. இதனால், சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, மதிய உணவு இடைவேளையின் போது அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று காலை, பரிசோதனை முடிவு வெளியானது. அதில், பிரேமலதாவுக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. இதனால், அவர் வழக்கம்போல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

click me!