ஜெயிக்கிறோமோ? தோக்கிறமோ? இபிஎஸ் வேட்பாளரைவிட ஒரு  ஓட்டாவது அதிகம் வாங்கணும்... தீயா களத்தில் குதிக்கும் தினா கேங்!

 
Published : Nov 24, 2017, 12:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
ஜெயிக்கிறோமோ? தோக்கிறமோ? இபிஎஸ் வேட்பாளரைவிட ஒரு  ஓட்டாவது அதிகம் வாங்கணும்... தீயா களத்தில் குதிக்கும் தினா கேங்!

சுருக்கம்

We will buy more than one vote edappadi palanisamy candidate

டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்,கே.நகர் இடைத் தேர்தலில் களமிறங்கி ஆளுங்கட்சியை விட அதிக வாக்குகள் வாங்கவேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை இப்போதே தொடங்கி விட்டனர்.

கிட்டத் தட்ட 10  மாத இழுபறிக்குப்பின் இரட்டை இலை சின்னம் இபிஎஸ் – ஓபிஎஸ் கைகளில் கிடைத்திருக்கிறது. ராயப்பேட்டை தலைமை அலுவலகம் முதல் ஜெயலலிதா சமாதி வரை இந்த வெற்றியை வெளுத்துக்கட்டி கொண்டாடி வருகின்றனர் அதிமுகவினர். இபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர்கள் என அனைவரின் கரங்களிலும், வாயிலும் லட்டுகள் பொங்கி வழிந்தன.

ஆனால் தங்களுக்கு அல்வா  கொடுத்துவிட்டார்களே என டி.டி.வி.தினகரன் செம அப்செட் ஆகிவிட்டாராம். தனக்கு நெருக்கமான  எம்.எல்.ஏ. , தங்கச் தமிழ் செல்வனுக்கு போன் செய்து தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்.

நான் அதிகமாக இரட்டை இலை சின்னத்தைத் தானே நம்பியிருந்தேன், இப்படி கைவிட்டு போய்விட்டதே என புலம்பியிருக்கிறார். அப்போது அங்கு வந்த வெற்றிவேல்தான் தினகரனை தேற்றி இருக்கிறார்.

அப்போது பேசிய அவர்,  இதெல்லாம் ஒரு பெரிய பெரிய விஷயமேயில்லை…இரட்டை இலை சின்னம் இபிஎஸ் கைக்குத்தான் போகும்  என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுதான் … மோடி கையில மத்திய ஆட்சி இருக்கும் போது நமக்கு எப்படி இலை கிடைக்கும்?  என்றெல்லாம் சொல்லி அவரை தேற்றி இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய வெற்றிவேல், நாய்க்கு தேங்காய் கிடைத்தால் என்ன செய்யுமோ அது போலத்தான்… இரட்டை இலை  சின்னத்தை வெச்சுகிட்டு இபிஎஸ் – ஓபிஎஸ் குரூப்பாலா ஒன்னும் பண்ண முடியாது என கூறியுள்ளார்,

அது மட்டுமல்லாமல் நம்ம ம்ம பவரை காட்ட இப்போ நமக்கு கிடைச்சிருக்கும் ஒரே வாய்ப்பு ஆர்.கே.நகர் தேர்தல்தான் என தெரிவித்துள்ளார்.

அந்த தேர்தலில் உங்களுக்கு மறுபடியும் தொப்பி சின்னம் கேட்டு வாங்கலாம். தொப்பியை வெச்சு மறுபடியும் நாம ஒரு ரவுண்ட் வருவோம். இதே தொப்பியை தூக்கிட்டுதானே இப்போ இருக்கிற அமைச்சர்கள் எல்லாம் அலைஞ்சாங்க. அந்தப் போட்டோவை எல்லாம் ஆர்.கே நகர் தொகுதியில் இருக்கும் செல்போன் நெம்பர்களுக்கும் வாட்ஸ் அப் பண்ணிவிடலாம். அவங்க நிறுத்துற வேட்பாளரைவிட, நீங்க அதிக ஓட்டு வாங்கி காட்டியாகணும். நம்ம டார்கெட் அதுவாகத்தான் இருக்கணும். அதை நோக்கி நாம வேலைகளை பார்க்க ஆரம்பிப்போம் என்று கூறியிருக்கிறார்.

அப்போது இடைமறித்த டிடிவி, ‘ஆர்.கே.நகரில் சின்னம் இல்லாமல் நாம ஜெயிக்க முடியுமா?’ எனக் கேட்டிருக்கிறார்.  அதற்கு பதிலளித்த வெற்றிவேல் , ஜெயிக்கிறோமோ? தோக்கிறமோ ?அது நமக்கு முக்கியமில்லை ? இபிஎஸ் வேட்பாளரைவிட ஒரு  ஓட்டாவது அதிகம் பெற வேண்டும், அது தான் கெத்து !! என கூறியுள்ளார்.

அப்போ தெரியும் உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரு பக்கம் இருக்காங்ன்னு… நம்ம மெஜாரிட்டயை  காட்ட நமக்கு கிடைச்ச மிகப் பெரிய வாய்ப்பு இது. ஒரு ஆளுங்கட்சி இடைத் தேர்தலில் தோல்வி அடைஞ்சா. அதைவிட கேவலம் என்ன இருக்க முடியும். அந்தக் கேவலத்தைப் பழனிசாமிக்கும், பன்னீருக்கும் உருவாக்கணும்.. என அடித்துக் கூறியுள்ளார்.

இதையடுத்து சற்று ரிலாக்ஸ் ஆன டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி. தொடர்பான வேலைகளில் உடனடியாக களம் இறங்க தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!