
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சையாகத்தான் போட்டியிட வேண்டும் என்றும் அவர் டெபாசிட் வாங்குகிறார் என்று பார்ப்போம் என்றும் மைத்ரேயன் எம்பி தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற்றதன்மூலம் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையின் கீழ் செயல்படுவதே அதிமுக என்பது அதிகாரப்பூர்வமாகிவிட்டது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், இரட்டை இலை பெறப்பட்ட பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருப்பது அதிமுகவினரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மைத்ரேயன் எம்.பி., இனிமேல் அதிமுகவில் அணிகள் என்பது கிடையாது. அதிமுக என்றால், அது இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் இயங்குவதுதான் அதிமுக.
ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்டால், அவர் சுயேட்சை வேட்பாளர்தான். அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது. ஆர்.கே.நகரில் வெற்றி அதிமுகவுக்குத்தான். திமுகவோ சுயேட்சை வேட்பாளர் தினகரனோ டெபாசிட் வாங்குவதே சந்தேகம்தான் என மைத்ரேயன் கிண்டலாக தெரிவித்தார்.