
அதிமுகவில் உறுப்பினரே இல்லாத ஜெ.தீபா இரட்டை இலை வழக்கில் இணைந்துள்ளார். கட்சி உறுப்பினராக இல்லாத ஜெ.தீபாவின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னம், தங்களுக்கு கிடைக்கும் என்று கூறி வந்த டிடிவி தினகரன் அணி தரப்பு தற்போது மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளது. குரங்கு கையில் பூமாலை சிக்கியதுபோல் எடப்பாடி-பன்னீர் தரப்பினரிடையே இரட்டை இலை சிக்கியுள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சட்டப்படி மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் இன்று கூறியிருந்தார்.
ஆனால் அதிமுகவில் உறுப்பினரே இல்லாத ஜெ.தீபா இரட்டை இலை வழக்கில் இணைந்தார். கட்சி உறுப்பினராக இல்லாத ஜெ.தீபாவின் வழக்கு தள்ளுபடி செய்யதது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில், இரட்டை இலையை மீட்டெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெ.தீபாவின் கணவர் மாதவன் வாழ்த்து கூறியிருந்தார். இரட்டை இலை சின்னத்தை வைத்தே தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றும் மாதவன் நேற்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மாதவன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் நீங்கள் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, இவ்வளவு சீக்கிரமாக தேர்தலை நடத்த காரணம் என்ன என்பது தெரியவில்லை என்றார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சியினருடன் கலந்து ஆலோசித்த பிறகே முடிவெடுப்போம் என்றும் கூறினார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றும், போட்டியிட முடிவு செய்தால் நாங்கள் தனித்தே நிற்போம் என்றும் கூறினார்.
உங்கள் மனைவி தீபா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மாதவன், அதை அவங்களத்தான் கேட்கணும். அவங்களோட விருப்பம். அவர் போட்டியிட்டால் என்னுடைய ஆதரவு தேவைப்படாது. அவர்கள் போட்டியிட்டால் அவர்கள் பேரவை சார்பிலேயே நிற்கலாம் என்று கூறினார்.