தினகரனுக்கு சசிகலா அவசர கடிதம்...! அடுத்த  ப்ளான் என்ன ?

 
Published : Nov 24, 2017, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
தினகரனுக்கு சசிகலா அவசர கடிதம்...! அடுத்த  ப்ளான் என்ன ?

சுருக்கம்

sasikala written a letter to dinakaran to meetup soon

தினகரனுக்கு சசி அவசர கடிதம்...! அடுத்த  ப்ளான் என்ன ?

இரட்டை இலை சின்னம் ஒபிஎஸ் இபிஎஸ் அணிக்கே சொந்தம் என  நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.அதனை தொடர்ந்து தற்போது, மிகவும் அப்செட்டில் உள்ள தினகரன் தரப்பு அடுத்து என்ன செய்வது என்ன யோசிக்கும் சமயத்தில் தான் சசிகலா தினகரனை பார்க்க  வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

இரட்டை இலை ஒபிஎஸ் இபிஎஸ் அணிக்கு சென்றதை அடுத்து சசிகலா  அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின்னர் இது குறித்து,தினகரனை நேரில் சந்தித்து  முக்கிய ஆலோசனை  செய்ய வேண்டும் என்பதற்காக சிறைத்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரிடம் சசிகலா கடிதம் கொடுத்துள்ளார்

கடிதத்தை பெற்ற தினகரன் ஆதரவாளர்

இந்த கடிதத்தை தற்போது தினகரன் ஆதரவாளர்களில் ஒருவர், சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று பெற்று சென்றுள்ளார்

விரைவில் சந்திப்பு

இரட்டைஇலை சின்னம் ஒபிஎஸ் இபிஎஸ் அணிக்கு சென்றதை அடுத்து, தினகரன் தரப்பிலிருந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய  வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்

தினகரன் சசிகலாவை சந்தித்தால், அடுத்து எப்படி அரசியலில் கால் வைக்கபோகிறார் என்ற ஆவல் எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!