ஜெயலலிதாவேயே தோற்கடித்த இரட்டை இலை! யாருக்கு கிடைத்தால் என்ன..!? அதிமுகவை அலறவிட்ட திமுக...

 
Published : Nov 24, 2017, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
ஜெயலலிதாவேயே தோற்கடித்த இரட்டை இலை! யாருக்கு கிடைத்தால் என்ன..!?  அதிமுகவை அலறவிட்ட திமுக...

சுருக்கம்

DMK Social media users are troll ADMK and Two leaf Symbol

இரட்டை இலை சின்னம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. காரணம் அதிமுக இரு அணியாக பிரிந்தது. இதையடுத்து தன்னோடு ஒத்துழைக்காத டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சை சமாதானத்திற்கு அழைத்தார். அதன்படி தற்போது, இரட்டை இலை சின்னம் மீண்டும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிக்கு கிடைத்துள்ளது. சின்னம் கிடைத்த சந்தோஷத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு ஸ்வீட் கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர்.

இப்படடி அதிமுகவினர் கொண்டாடிவரும் வேலையில், திமுகவினர் ஒரு பக்கம் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைத்தால் என்ன? இதே  இரட்டை இலையில் தான் ஜெயலலிதாவே தோற்றார் என்பதை மறக்காதீங்க. என அதிமுகவினரை சமூக வலைதளங்களில் கதறவிடுகின்றனர்.

அப்படி அதிமுகவின் விசுவாசிகளை திமுகவினர் கதறவிட்ட ஒரு பதிவு இதோ...

கட்சி யாருக்கென்பதில் சின்னம் பிரதான பங்கை வகிக்கும் ஆனால் அது தற்காலிகமானது.. ஏனெனில் கட்டுகோப்பாக வழிநடத்தும் தலைமை இல்லையெனில் கட்சி சிதறிபோகும் படுதோல்வி அடையும் ..எந்த கட்சியாக இருந்தாலும் சரியான தலைமையில்லையெனில் 
அப்போது சின்னம் பெரிய மாற்றத்தை தந்துவிடமுடியாது..

தினகரனுக்கு கிடைக்காதென அப்போதே தெரியும் காரணம் உ.பி.யில் அதிகம் எம்எல்ஏக்களை தன்வசம் கொண்டிருந்த அகிலேஷ்விற்கு தான் கிடைத்தது 


இங்கே அதிமுகவில் யார் தலைமை பன்னீரோ எடப்பாடியோ தலைமைக்குரியவர்களாக அவர்களே நம்பமாட்டார்கள் பதவிக்காக ஒருங்கிணைத்திருக்கிறார்களே தவிர .. இருக்கிற கால அவகாசத்திற்குள் ஏதேனும் சேர்த்துக்கொள்ள முடியாதா என ஒற்றை சிந்தனையை தவிர வேறொன்றும் பெரிதான எதிர்பார்ப்பு இருவருக்குமே இல்லை..

சிலர் அங்கலாய்த்து கொள்கிறார்கள்.. சிலர் தினகரனக்கு வீழ்ச்சி என்கிறார்கள்.. சின்னத்தை பெற்றதாலேயே அதிமுக வலுப்பெற்றுவிட்டதாக எண்ணமுடியாது அதே வேளை தினகரனுக்கு கட்சியில் உள்ள செல்வாக்கை குறைத்து மதிப்பிடவும் முடியாது.. தற்காலிக நிம்மதியை இருவர் அணிக்கு தரலாமே தவிர அது நீடிக்குமென்றோ வெற்றியை தேடிதருமென்ற சொல்லமுடியாது ..

இனி ..சின்னத்தை கொண்டு வெற்றிபெற முடியுமென அவர்களே நம்பமாட்டார்கள் காரணம் அவர்களுக்கு கட்சி ..சசிகலா தரப்பிற்கு போகவில்லை என்பதை காட்ட பயன்பட்டிருக்கிறது 
அவ்வளவுதான் ..

அதிமுக ஆர்.கே.நகரில் இரட்டை இலையில் போட்டியிடவேண்டும் ..ஏனெனில் அப்போதுதான் மிகப்பெரிய தோல்வியை பெறும் ..அதிமுகவின் பலமும் தினகரனின் பலமும் தெரியலாம் ..

போலி வாக்காளர்கள் 45,000 பேர் நீக்கபட்டிருக்கிறார்கள் ஜெயலலிதாவே 36,900 வாக்குகளில் தான் வெற்றிபெற்றார் இதிலிருந்தே ஜெயலலிதாவும் பர்கூரை போல இங்கே தோற்றிருப்பது வெட்டவெளிச்சம் இந்தமுறை யார் நின்றாலும் தோல்வி உறுதி ஆனால் இதுவரை அதிமுக சந்தித்திராத தோல்வியாக கூட இருக்கும் செத்தகிளியை சிங்காரித்து என்ன பயன் என்பார்கள் அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

இவர்களை விட டெல்லி ரொம்ப பதறியிருப்பதும் இதில் தெரிகிறது.. திமுகவை வீழ்த்த முடியாதென அறிந்து அருகதையற்றவர்களுக்கு சின்னத்தை கொடுத்தேனும் வெற்றியை தடைய முடியுமா என கணக்கு போடுகிறார்கள்.. உண்மை வேறுவிதமாக காட்சி தருவது தெரியாமல் .. இனி இவர்களால் ஒரு சிறிய அசைவை கூட தமிழக அரசியலில் நடத்தமுடியாது நம்பிக்கையில்லாத வழிநடத்த சரியான தலைமையின்மை வரலாற்று தோல்வியை தரும் மீண்டும் எழவே முடியாவாறு..

இதில் மற்றொரு உண்மையை தேர்தல் ஆணையம் எழுத்துபூர்வமாக தந்திருக்கிறது.. அதாவது 111 பேர்தான் சட்டமன்றத்தில் இருவர் அணிக்கு அதாவது பெரும்பான்மை இல்லை....

இரட்டைஇலையில் நின்று ஜெயலலிதா தோற்றுயிருக்கிறார்.. அதே இலையால் கலைஞரை தோற்கடிக்கமுடியவில்லை.. ஆம்.. உதயசூரியனை வெல்ல முடியவில்லை.. உதயசூரியன் ஜெயலலிதாவை வீழ்த்தியிருக்கிறது..

ஆம் .. நினைவில் கொள்க..
கலைஞரை வீழ்த்த முடியாத சின்னம் தான் இலை ஆனால்..
ஜெயலலிதாவை வீழ்த்தியிருக்கிறது உதயசூரியன்.

ஆக திமுகவினரின் இந்த பதிவைப்போல சின்னம் யாருக்கு கிடைத்தால் என்ன? வேட்பாளரையும், மக்களின் மனநிலையை பொறுத்தே வெற்றி அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!