அதிமுக கோட்டையை ஆழ குழிதோண்டி புதைப்போம்... கோவையில் மு.க. ஸ்டாலின் ஆவேசம்..!

Published : Feb 20, 2021, 08:40 AM IST
அதிமுக கோட்டையை ஆழ குழிதோண்டி புதைப்போம்... கோவையில் மு.க. ஸ்டாலின் ஆவேசம்..!

சுருக்கம்

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.  

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவை கொடிசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு பேசினார். “இந்த ஊரைச் சேர்ந்த அமைச்சர்  உள்ளாட்சித் துறை அமைச்சர் சுண்ணாம்பு பவுடர், பினாயில் வாங்கியதில்கூட ஊஅழல் செய்திருக்கிறார். ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி என 12,500 கோடி ஊழல் செய்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டப்பட்ட ஒருவருடைய நிறுவனத்தின் வருவாய் முதலில் ரூ. 17 கோடியாக இருந்தது. இப்போது அந்நிறுவனத்தின் வருவாய் 3,000 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிவருகிறார். நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில், அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம். கருணாநிதி மறைந்தபோது அவரை அடக்கம் செய்யகூட 6 அடி இடத்தை கொடுக்கவில்லை இந்த ஆட்சியார்கள். அவர்களுக்கு இத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!
TVK vs DMK: புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! அரசு விழாவில் அரங்கேறிய பனிப்போர்! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!