தேர்தல் பயத்தால் வேல் தூக்கும் நாத்திகர்கள்... திமுகவை சீண்டிய நிர்மலா சீத்தாராமன்..!

Published : Feb 19, 2021, 09:56 PM ISTUpdated : Feb 20, 2021, 08:42 AM IST
தேர்தல் பயத்தால் வேல் தூக்கும் நாத்திகர்கள்... திமுகவை சீண்டிய நிர்மலா சீத்தாராமன்..!

சுருக்கம்

தமிழகத்தில் ஒரு பாஜ எம்பிகூட இல்லை என்றபோதும் குறை இல்லாமல் சிறப்பாக பணியாற்றிவருகிறார் பிரதமர் மோடி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.  

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்னைக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். பொய்ப் பிரசாரங்கள் செய்துதான் அரசியல் செய்யும் சூழல் நாட்டில் உருவாகியிருக்கிறது.  தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமைத்துள்ளதன் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு ஒருவித பயம் வந்துவிட்டது. பாஜகவின் வேல் யாத்திரையால் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவிலுக்கே செல்லாதவர்கள்கூட இப்போது கோவிலுக்கு செல்ல தொடங்கியிருக்கிறார்கள். தமிழகத்துக்கு நல்லாட்சி கிடைக்க வேண்டும். தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும். தமிழகத்தில் ஒரு பாஜ எம்பிகூட இல்லை என்றபோதும் குறை இல்லாமல் சிறப்பாக பணியாற்றிவருகிறார் பிரதமர் மோடி” என்று நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!