TTV.Dhinakaran: உங்கள மாதிரி ஈன புத்தி எங்களுக்கு கிடையாது.. எடப்பாடியாருக்கு டிடிவி. எச்சரிக்கை..!

Published : Dec 06, 2021, 06:31 AM IST
TTV.Dhinakaran: உங்கள மாதிரி  ஈன புத்தி எங்களுக்கு கிடையாது.. எடப்பாடியாருக்கு டிடிவி. எச்சரிக்கை..!

சுருக்கம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது என டிடிவி.தினகரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக அமமுகவினர் மீது அதிமுக அம்மா பேரவை  துணை செயலாளர்  மாறன் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில்,  எம்ஜிஆர், ஜெயலலிதா துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன்.

பழனிசாமி & கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் ஈன புத்தி எங்களுக்கு கிடையாது.

அதுவும் நாங்கள் போற்றி வணங்குகின்ற எம்ஜிஆர், ஜெயலலிதா துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ் பாரதி..! எச்.ராஜா சாப்பிட்ட எச்சை இலையில் உருள்வாராஇபிஎஸ் ..? என மோசமான கேள்வி
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது..! வீட்டின் கதவை உடைத்து காவல்துறை அதிரடி..!