
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம் என கூறி ஜெ.தீபா பேரவையின் சார்பில் 5 லட்சம் பிரமாண பத்திரம் டெல்லி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஜெ மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த நிலையில் நானும் ரவுடிதான் என்ற நோக்கில் மூன்றாவது ஆளாக மூக்கை நுழைத்தவர் தான் ஜெயல்லிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா.
ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்திலேயே வளர்ந்த இடமான போயஸ்கார்டன் பகுதிக்குள் நுழைய விடாமல் துரத்தியடிக்கப்பட்டவர் தீபா.
அப்போதைய காலகட்டத்தில் ஜெ தோழியான ச்சிகலாவின் கை ஓங்கி இருந்ததால் பதுங்கி பதுங்கி பேட்டி அளித்து வந்தார் தீபா.
ஆனால் தற்போது வாண்டடாக செய்தியாளர்களை அழைத்து திடீர் திடீர் என பல்பு வாங்க ஆரம்பித்துள்ளார்.
இதனிடையே எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி கொடியையும் வெளியிட்டார்.
ச்சிக்லாவை எதிர்க்க அதிமுகவில் ஆளில்லாத காரணத்தால் தீபாவை மக்கள் ஆதரிக்க ஆரம்பித்தார். ஆனால் இவர் ஒவராக பிகு பன்னியதால் அதே மக்கள் அவரை புறக்கணிக்க ஆரம்பித்தனர்.
இதனால் தமிழகத்தில் நடைபெற்று வரும் அசாதரண சூழ்நிலையில், நானும் அதிமுக தான், எனக்கே கட்சியும் சின்னமும் சொந்தம், ஜெவின் சொத்துக்கள் அனைத்திற்கும் நானே வாரிசுதாரர் என தீபா கொக்கரிக்க ஆரம்பித்தார்.
இதனிடையே பேரவையில் இருந்த பத்து பேரில் ஐந்து பேரை தனியாக பிரித்து கட்சி ஒன்றை உருவாக்கி சில நாட்களில் திவாலானார்.
இதைதொடர்ந்து இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதை கண்ட தீபா தானும் டெல்லி தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செயதார். மேலும் தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுத்தால் இன்னும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வேன் என பேட்டியெல்லாம் கொடுத்தார்.
அதன்படி இன்று இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம் என கூறி ஜெ.தீபா பேரவையின் சார்பில் 5 லட்சம் பிரமாண பத்திரம் டெல்லி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
கட்சி அமைப்பே மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் செயல்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இத்தனை லட்சம் பேர் கொண்ட பிரமாண பத்திரங்களை தீபா தரப்புதாக்கல் செய்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.