
சென்னை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததாகக் கைதானவர் ஏன் திமுகவைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே.நகரில் உள்ள 38வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த கருணாமூர்த்தி என்பவரை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை கைது செய்தனர். அவர் அதிமுக அம்மா கட்சியைச் சேர்ந்தவர் என்று செய்திகள் வெளியானது.
இந்தச் சூழலில் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், " எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பணம் விநியோகித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது திமுகவின் சதித்திட்டமாக ஏன் இருக்கக் கூடாது.தொப்பி அணிந்து கொண்டு பணம் தந்தால் நாங்கள் தான் பணம் அளிக்கிறோம் என்று அர்த்தமில்லை.பணப்பட்டுவாடா செய்ததாக கைதானவர் ஏன் திமுகவைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.