
தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து சேலத்தில் நாளை லாரி உரிமையாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
டீசல் மீதான வாட் வரி, காப்பீட்டுக் கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்டவைகளைக் கண்டித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்தச் சூழலில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நாளை நடைபெறுகிறது. அப்போது போராட்டத்தை தொடர்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.