நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.. டெல்லிக்கு போறோம்.. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 13, 2021, 11:49 AM IST
Highlights

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, நீட் தேர்வு பொறுத்தவரை தமிழகத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. ஏ.கே ராஜன் குழு தேவை இல்லை என்று பாஜக வழக்கு போடப்பட்டு இருக்கிறார்கள். 

தமிழக அரசு பொறுத்தவரை நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது எனவும், அப்படி நடக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு இடற்பாடின்றி தேர்வு எழுத தயாராக இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.நாளை மறுநாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க டெல்லி செல்கிறார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இல்லத்தில் அதிமுகவில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, 

 நீட் தேர்வு பொறுத்தவரை தமிழகத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. ஏ.கே ராஜன் குழு தேவை இல்லை என்று பாஜக வழக்கு போடப்பட்டு இருக்கிறார்கள். அந்த  வழக்கானது  இன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருகிறது. ஏ.கே ராஜன் குழு அறிக்கை சமர்ப்பிக்க தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கு இன்று நீதி மன்றத்திற்கு  விசாரணைக்கு வருகிறது. மொத்தத்தில் நீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என  முதலமைச்சர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதற்காக ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக மூலம் குடியரசு தலைவருக்கு கோரிக்கை அனுப்பியும், அதனை நிராகரித்துவிட்டனர். 

ஆனால் அதுகுறித்து அப்போது அதிமுக அரசு சட்ட சபையில் பேசவில்லை என்றார். மாணவர்கள் நீட் தேர்விற்கான கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களின் படிப்பு என்பது ஒருநாளும் வீணாகாது. தடுப்பூசிகளை பொருத்தவரை ஒன்றிய அரசை நம்பியே இருக்கும் நிலை உள்ளது எனவும், தடுப்பூசிகள் கூடுதலாக கொடுக்க வேண்டும் என தொடர்ந்து முதலமைச்சர், பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறார். தடுப்பூசி வர வர அனைவருக்கும் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என்ற அவர், நாளை மறுநாள் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறோம் என கூறினார். 

click me!