தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு..?? உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்த அதிரடி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 13, 2021, 11:34 AM IST
Highlights

தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி உயர்கல்வித்துறை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் கல்வி தொடர்பான செய்திகளை ஆலோசித்ததாகவும், பல்கலைக்கழகங்களுடன் 83 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து கடுமையானபாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தொடர் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.  

தற்போது வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துவருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி உயர்கல்வித்துறை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் கல்வி தொடர்பான செய்திகளை ஆலோசித்ததாகவும், பல்கலைக்கழகங்களுடன் 83 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பல புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க கோரிக்கை வைத்துள்ளதாக கூறிய அவர், உயர்கல்வித்துறை வளர்ச்சியாக அனைத்தையும் செய்வோம் என அவர்கள் தெரிவித்ததாகவும், இது வெற்றிகரமான சந்திப்பு எனவும் குறிப்பிட்டார். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகாக பணிகள் ஆக்ஸ்ட் 1ம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார்.
 

click me!