பூச்சாண்டி காட்டி புரிய வைக்கவே கொங்கு நாடு... ஹெச்.ராஜா அதிரடி விளக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 13, 2021, 11:41 AM IST
Highlights

கொங்கு நாடு என்பது விவாதமாக தொடங்கி இருக்கிறது. காரணம் என்னவென்றால் இவர்களுக்கு புரியச்செய்ய வேண்டும்.

கொங்கு நாட்டை தனி மாநிலமாக உருவாக்குவது பற்றி மத்திய அரசு முடிவு செய்யவில்லை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விளக்கமளித்துள்ளார். 

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசை ஒன்றிய அரசு எனவும் தமிழகத்தை தமிழ்நாடு எனவும் அழைத்து வருகின்றன. இந்நிலையில் கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை பிரித்து கொங்குநாடு என்கிற தனி மாநிலத்தி உருவாக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு திமுக தோழமை கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் கொங்குநாடு என்கிற பிரிவினையை விதைக்க வேண்டாம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் கோரிக்கை விடுத்துள்ளார். யாரையோ சிறுமைப்படுத்த இப்படி நச்சுத்தன்மையை விதைப்பது நல்லது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு வலுவான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறபோது அதனை இரண்டு மூன்றாக பிரித்தால் தமிழகம் வலுவிழந்து போகும். அப்படி மாநிலங்களை வலுவிழக்கச்செய்து மத்திய அரசாங்கத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. தமிழ் பேசக்கூடிய மொழிவாரி மாநிலமாக உள்ள தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்கிற விவாதமே பெரும் வருத்தத்துக்குரியது’’என கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ராமநாதபுரத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ‘’கொங்கு மாநிலத்தை பிரிப்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம் தான் இந்தியா என்கிற ரீதியில் பேசி வந்தார்கள். அதன் எதிர்வினையாக கொங்கு மாநிலம் என்கிற கோஷம் எழுந்துள்ளது. ஆனால் ,இதுகுறித்து  மத்திய அரசும் முடிவு செய்யவில்லை, பாஜகவும் முடிவு செய்யவில்லை. கொங்கு நாடு என்பது விவாதமாக தொடங்கி இருக்கிறது. காரணம் என்னவென்றால் இவர்களுக்கு புரியச்செய்ய வேண்டும். ஒன்றிய அரசு என்று பேசியது தவறு. அது பிரிவினைவாத விதை என்பதை புரியச் செய்ய வேண்டும் என்பதற்காவே இந்த கொங்கு நாடு விவாதம் எழுந்துள்ளது’’என அவர் கூறியுள்ளார். 

click me!