எங்கள் முடிவில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.. அந்த 9 தொகுதிகள் தனிக்கவனம்.. அண்ணாமலை சரவெடி..!

By vinoth kumar  |  First Published Oct 11, 2023, 9:10 AM IST

 தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தவில்லை. 


தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கு எங்களை தயார் செய்து கொள்கிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில்  மையக்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- வலுவான கூட்டணி அமைக்க பாஜக தேசிய தலைமை முடிவு... ஆனால்.. ட்விஸ்ட் வைத்து பேசிய பி.எல்.சந்தோஷ்..!

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தவில்லை. தேசிய கட்சியாக தற்போது 5 மாநிலத் தேர்தலில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கு எங்களை தயார் செய்து கொள்கிறோம். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழக பாஜக தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். வரும் நாட்களில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் கவனம் செலுத்துவோம் என்றார்.

இதையும் படிங்க;- திமுக ஊழல்வாதிகளின் கூடாரம்.. மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் - எம்.பி ராசாவை கடுமையாக சாடிய கே. அண்ணாமலை!

மேலும், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசித்தோம். ஆ.ராசாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம், ஜெகத்ரட்சகனிடம் பெரும் அளவில் பணம் பறிமுதல்  ஆகியவை, தமிழ்நாட்டில் மக்கள் பணம் எந்த அளவுக்கு தனியார் பணமாக மாறியுள்ளது என்பதை காட்டுவதாக விமர்சித்தார். இந்த சோதனைகளின் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை. அதிகாரிகள் சோதனை ஈடுபடுகின்றனர் என்றார். 

click me!