தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான மோதலை அடுத்து தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது.
தமிழகம் முழுவதும் அனைத்து எம்.பி. தொகுதிகளிலும் 2 தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான மோதலை அடுத்து தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 5ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க;- காவிரி பிரச்சினையில், நாளொரு நாடகம்.. வீடியோ ஆதாரத்துடன் திமுக முகத்திரையை கிழிக்கும் அண்ணாமலை..!
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- 2024 தேர்தலில் யாருடன் மோத வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் திமுக இடையே தான் போட்டி கூறினார். கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் சந்தோஷமோ வருத்தமோ இல்லை என்று கூறினார். ஆனால், இந்த விவகாரம் குறித்து பாஜகவின் தேசிய தலைமை இதுவரை அதிகாரபூர்வமாக எந்த கருத்தும் கூறவில்லை.
இதையும் படிங்க;- முதல் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த மனைவி? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
இந்நிலையில், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நேற்று மையக் குழுக்கூட்டத்தில் தேர்தல் பணிகள், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.எல்.சந்தோஷ்;- தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு சிறிது காலதாமதம் ஆகலாம். பாஜக இதுவரை பெறாத அளவுக்கான வாக்கு சதவீதத்தை தேர்தலில் பெற வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும், பேசிய அவர் தமிழகம் முழுவதும் அனைத்து எம்.பி. தொகுதிகளிலும் 2 தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்திலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என பி.எல்.சந்தோஷ் கூறியுள்ளார்.