திமுகவில் பல மூத்த அமைச்சர்கள் இருக்கும் நிலையில், அவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், எம்ஜிஆர் 36 ஆண்டுகள் முன்பு மறைந்தாலும் அவர் பெயரை சொல்லாமல் தமிழகத்தில் யாராலும் அரசியல் நடத்த முடியவில்லை.
தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூட எம்ஜிஆரை சித்தப்பா என்று கூறிதான் அரசியல் பேச வேண்டி உள்ளது. எம்ஜிஆரை சித்தப்பா என சொல்வது மக்களை ஏமாற்ற இதையும் ஒரு வழியாக பயன்படுத்துகிறார். தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தராத ஆட்சி திமுக.
undefined
கள்ளக்காதலுக்கு இடையூறு; எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட கணவன்: இருவர் கைது
அதிமுகவினர் யாருடைய வாரிசு? யாரும் நடிகர் விஜயோட வாரிசு என சொல்லி விடாதீர்கள். நாம் ஜெயலலிதா எம்ஜிஆரின் வாரிசு. அரசியலில் தங்கள் வாரிசுகளை அறிமுகப்படுத்தாதவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். ஆனால் கலைஞர் குடும்ப ஆட்சி நடத்தியவர். ஜெயலலிதா போல உத்திரபிரதேச முதல்வர் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாக சொன்னார். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை. ஜெயலலிதா அமைச்சரவையில் 3வது, 6வது இடத்தில் இருந்த எடப்பாடி எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும் வகையில் 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை நடத்தி காட்டினார்.
திமுக பொய்மூட்டைகளை சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டத்திலும் அவிழ்த்து விடுகிறார்கள். திமுகவில் 35 பேர் அமைச்சராக இருந்தாலும் 10வது அமைச்சராக உதயநிதி உள்ளார். சீனியர் அமைச்சர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டார் உதயநிதி ஸ்டாலின். என்மகனோ, உறவுகளோ கட்சிக்கும், ஆட்சிக்கும் வரமாட்டார்கள் என சொன்னவர் ஸ்டாலின். அதேபோல கட்சியில் மூத்தவர்கள் இருக்கும் போது நான் எப்படி அமைச்சராக முடியும் என பேசியவர் உதயநிதி.
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வேண்டுமா? இன்றே கடைசி வாய்ப்பு
ஆனால் ஆட்சியில் அமைச்சராக பொறுப்பேற்று அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்து இருக்கிறார். சம்சாரம் இல்லையென்றாலும் மின்சாரம் வேண்டும் என்ற காலத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டனர். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல தன் மகனை புகழ்ந்து பேசுகிறார் ஸ்டாலின். கம்யூனிஸ்ட்டுகள், திருமாவளவன், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திமுக ஆட்சியில் வாயில் திண்டுக்கல் பூட்டு போட்டுவிட்டார்கள் என்றார்.