Ayodhya mandapam case: உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.. அடக்கமா பேசிய அமைச்சர் சேகர்பாபு.

Published : Apr 28, 2022, 12:28 PM ISTUpdated : Apr 28, 2022, 12:30 PM IST
Ayodhya mandapam case: உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.. அடக்கமா பேசிய அமைச்சர் சேகர்பாபு.

சுருக்கம்

அக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலும் இல்லை, ஆனால் வருங்காலத்தில் இது போன்று எந்த சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

அயோத்தியா மண்டபம் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக் கொள்வதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் சேகர் பாபு இவ்வாறு கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 550 திருக்கோயில்களுக்கு 1500 விற்பனை மையங்களை (POS) வழங்கி புதிய வசதிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். பார்த்தசாரதி திருக்கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோவில்களில் (POS)இயந்திரங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  கோவில் இடங்களை ஆக்கிரமித்து செய்துள்ள இந்த கால கட்டடம் அல்ல, ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை இத்துறை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Ayodhya mandapam என்பது 2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பிரச்சினை என்ற அவர், அயோத்தியா மண்டபம் குறிப்பு தனி நீதிபதி உத்தரவை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதை ஏற்றுக் கொள்வதாகவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்னரே இதில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தஞ்சை சப்பரம் திருவிழாவை அப்பகுதியில் உள்ள பொது மக்களே ஒன்று கூடி நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கு தகவல் வரவில்லை, அக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலும் இல்லை, ஆனால் வருங்காலத்தில் இது போன்று எந்த சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் விளக்கமாக தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். வெளிநாடுகளில் இருந்து மீட்கப்படும் சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது என தகவல் கிடைக்கும் பட்சத்தில், அச்சிலைகளை அக்கோயில்களுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிபதி சாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போட்ட எம்.பி.க்களை உடனே தூக்க வேண்டும்..! அண்ணாமலை ஆவேச பேச்சு
அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! பொங்கியெழுந்த இபிஎஸ்!