ஆண்களை அசிங்கப்படுத்தினாரா வானதி சீனிவாசன்..? ஆண் எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..! சட்டப்பேரவையில் சலசலப்பு..

By Ajmal KhanFirst Published Apr 28, 2022, 12:03 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஆண்கள் தொடர்பாக கூறிய கருத்துக்கு ஆண் சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சல் போட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்கள் வருமானம் டாஸ்மாக் செல்கிறது

தமிழக சட்டப்பேரவையில், கைத்தறி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் பற்றி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி கேட்கும் போது, மகளிர் சுய உதவி குழுக்கள் வறுமையை போக்க மிக முக்கிய பங்கு வகுக்கின்றனர். ஆண்கள் கையில் வரும் வருமானம் பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போயிடும். ஆனால் பெண்கள் கையில் கிடைக்கும் வருமானம் கல்வி, உடல் நிலை பாதிப்பு போன்றவற்றிற்காக பணம் முழுக்க முழுக்க குடும்பம் செலவுக்கு பயன்படுகிறது என தெரிவித்தார்.இதனை தொடர்ந்து பேரவையில் இருந்த ஆண் எம்.எல்.ஏக்கள் சத்தம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கொந்தளித்த ஆண் எம்.எல்.ஏக்கள்

இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அமைதி காக்கும் படி கேட்டுக்கொண்டார். கேள்வி நேரத்தில் கேள்வியை மட்டும் கேளுங்கள் என தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், மத்தவங்கல்லாம் கொதிக்க வேண்டாம், எதற்கு கொதிக்க வேண்டும்..நான் எல்லோரையும் சொல்லவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், மகளிர் சுய உதவி தயாரிக்கும் பொருட்களை ஆன்-லைனில் விற்பனை செய்ய எந்த முன்னனி நிறுவனத்தோடு அரசு ஒப்பந் போட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெரிய கருப்பன், ஏற்கனவே மகளிர்  மேம்பாட்டு நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட www.moneybazar.com புதுப்பித்து தற்போது உள்ள நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறினார். முன்னனி மின்னனு நிறுவனத்தோடு இணைந்து வர்த்தகம் செய்ய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.


 

click me!