#BREAKING : உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumar  |  First Published Apr 28, 2022, 11:08 AM IST

 உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி பிரேமலதா என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தனக்கு எதிரான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனகூறியிருந்தார்.


சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் வழக்கு

Tap to resize

Latest Videos

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

உதயநிதி தரப்பில் மனு

இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி பிரேமலதா என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தனக்கு எதிரான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனகூறியிருந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தள்ளுபடி

இந்த மனுக்களில் விசாரணை நடத்திய நீதிபதி பாரதிதாசன் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். அந்த வழக்கில் இன்று காலை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், உதயநிதி மீது  பிரேமலதா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
 

click me!