அடி தூள்... ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்.. 50 நாட்களுக்கு நடக்கிறது கூட்டத் தொடர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 10, 2021, 12:06 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி  தொடங்கும் எனவும், அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி  தொடங்கும் எனவும், அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரும் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது, இந்து ஆலயங்களை சீரமைக்க 1000 கோடி ரூபாய் நிதி, பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம். 

மகளிர் பேருக்கான உதவித்தொகை ரூபாய் 24 ஆயிரமாக உயர்வு என பல்வேறு வாக்குறுதிகளை திமுக வழங்கியது. இந்நிலையில் அந்த வாக்குறுதிகளை படிப்படியாக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார், ஆனாலும்கூட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற திட்டம் ஏன் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் போதிய பட்ஜெட் இல்லாததால் அது காலதாமதமாக வதக்கவும், ஆனால் நிச்சயம் வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் உரிய விளக்கம் அரசுத்தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பட்ஜெட்டுக்கு முன்பாக தமிழக நிதி நிலவரம் குறித்து நிதி அமைச்சர் பி.டி தியாகராஜன் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக மொத்த கஜானாவை காலி செய்து விட்டது என்றும், தமிழகத்தின் நிதி கட்டமைப்பை முற்றிலுமாக அது சீரழித்து விட்டது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் 10 ஆண்டுகள் கழித்து திமுக தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவினர் தவிர மற்ற கட்சியினர் கலந்து கொண்டனர். அதில் தமிழக பட்ஜெட் 13 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி துவங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 50 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக என்னென்ன மக்கள் நல திட்டங்களை அறிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருந்தாலும், தமிழக நிதி நிலைமை மிக மோசமாக இருந்து வரும் நிலையில் அதை திமுக எப்படி சமாளிக்கப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. 
 

click me!