எஸ்.பி.வேலுமணி கோரோனாவில் மட்டும் அடித்த கொள்ளை ரூ .10,000 கோடி..! மெர்சலாக்கும் சிவசேனாதிபதி..!

By Thiraviaraj RMFirst Published Aug 10, 2021, 11:21 AM IST
Highlights

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது வரவேற்கத்தக்கது. 

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது வரவேற்கத்தக்கது என கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. வேலுமணி உறவினர் சந்திரசேகர் வீட்டில் வரவு, செலவு புத்தகம் உள்பட ஆவணங்கள் சிக்கின. கோவை மாவட்ட எம்ஜிஆர் அணி நிர்வாகியாக உள்ளார் சந்திரசேகர். கோவையில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் திமுக சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனதிபதி ‘’எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது வரவேற்கத்தக்கது. எஸ்.பி.வேலுமணி கொரோனாவை வைத்து அடித்த தனிகொள்ளை கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி அடித்திருப்பார்’’ எனத் தெரிவித்துள்ளார். 

click me!