ரெய்டு.. ரெய்டு.. ரெய்டு. சிக்குகிறார் எஸ்.பி வேலுமணி..?? தொடர்புடைய நிறுவனங்களில் கோடிக்கணக்கில் சொத்து..

By Ezhilarasan BabuFirst Published Aug 10, 2021, 11:42 AM IST
Highlights

2014 -18 ஆம் ஆண்டுகளில் மட்டும் கோவை மாநகராட்சியில் 346. 81 கோடி ரூபாய்க்கும், சென்னை மாநகராட்சியில் 464.02 கோடிக்கும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் ஒப்பந்தங்களை ஒதுக்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எஸ்.பி வேலுமணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தான் அமைச்சராக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, தனக்கு நெருக்கமானவர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தங்களை வழங்கியதாக அவர் மீது  தொடர் புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் அவரது வீடு மற்றும் அலுவலகம் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

2014 -18 ஆம் ஆண்டுகளில் மட்டும் கோவை மாநகராட்சியில் 346. 81 கோடி ரூபாய்க்கும், சென்னை மாநகராட்சியில் 464.02 கோடிக்கும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் ஒப்பந்தங்களை ஒதுக்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. அதே நேரத்தில் எஸ்.பி வேலுமணி சார்ந்த நிறுவனங்களில் துவங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மின்னல் வேகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பது குறித்தும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதுதொடர்பாக அவரிடத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக 

1) ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே  ரூபாய் 100 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 

2) Vardhan infrastructure-ன் 2012-2013 ஆண்டில் வருமானம் 2 கோடியாக இருந்த நிலையில் 2018-19 ஆம் ஆண்டில் 66.72 கோடி ஆகியுள்ளது.

3)2012ஆம் ஆண்டில் 38 லட்சமாக இருந்த சிஆர் கன்ஸ்ட்ரக்ஷன்னின் வளர்ச்சி 2018ல் ரூபாய் 43.56கோடி ஆகியுள்ளது. 

4) 2012-இல் ரூபாய் 42 கோடிக்கு வர்த்தகம் செய்து வந்த கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனம் 2018ல் ரூபாய் 453 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. 

5) ரூபாய் 34 கோடிக்கு வர்த்தகம் செய்துவந்த ஏசிஇ டெக் மெஷினரி நிறுவனம் 2018ல் ரூபாய் 155 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது.

இப்படி அவர் தொடர்புடைய ஒவ்வொரு நிறுவனமும் துவங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே பல கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அதிமுக தொண்டர்கள் சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில் குவிந்து வருகின்றனர். ஏராளமானோர் அங்கு கட்டுக்கடங்காமல் குவிந்ததால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 
 

click me!