மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த சாவர்க்கர் வீரரா.? அப்ப பகத்சிங், சுபாஷ்சந்திரபோஸ் யாரு.. சீறும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2022, 5:07 PM IST
Highlights

நாட்டிற்காக 16 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர் நேரு ஆனால் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்தான் சாவர்க்கர், இருவரையும் எப்படி ஒப்பிட முடியும் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமர் நேருவுடன் சாவர்க்கரை ஒப்பிட்டு மோடி பேசியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டிற்காக 16 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர் நேரு ஆனால் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்தான் சாவர்க்கர், இருவரையும் எப்படி ஒப்பிட முடியும் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமர் நேருவுடன் சாவர்க்கரை ஒப்பிட்டு மோடி பேசியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது, மதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று திருச்சி குற்றவியல் நீதிபதி முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். சீமான் உட்பட  மேலும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்:  பிடிஆர் மீது சேற்றை வாரி இறைக்க முயன்ற எஸ்.ஜி சூர்யா.. ஆதாரத்துடன் பொய்யை அம்பலப்படுத்திய நெட்டீசன்..

இதேபோன்று மதிமுகவினர் கொடுத்த மற்றொரு வழக்கில் சீமான் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின் அவர் நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு:- ஒரு நாட்டில் இலவசங்களால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அதை நிரூபிக்க முடியுமா, இலவசங்களால் ஒரு அங்குலம் கூட நாடு வளர முடியாது,  காங்கிரஸ் பாஜகவை பொருத்தவரையில் இரண்டுமே ஒன்றுதான், காங்கிரஸ் கதராடை போட்ட பாஜக, பாஜக காவி ஆடை போட்ட காங்கிரஸ் என அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: தொண்டர் பலம் இருக்கிறது என்றால் பொதுக்குழுலில் நிரூபிக்கட்டும்! OPS கோரிக்கையை நிராகரித்து சவால் விடும் EPS.!

பிரதமர் மோடி நேருவுடன் சாவர்க்கரை ஒப்பிட்டுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு தேசியக்கொடியை பிடிக்கும் அருகதை இல்லை, நாட்டின் சுதந்திரத்திற்காக நேரு 16 ஆண்டு காலம் சிறையில் இருந்தார், ஆனால் சாகும் வரை விசுவாசமாக இருப்பதாக கூறி  மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்தவர் தான் சாவர்க்கர் அவரைப் போய் வீரர் என்று எப்படி கூறலாம். பாஜகவினர் இப்படித்தான் வரலாறு மாற்றி மாற்றி திரித்துக் கூறி வருகின்றனர்.

வீரர் ஏனென்றால் பகத்சிங் போலவும் சுபாஷ் சந்திரபோஸ் போலவும் இருக்க வேண்டும்,  மன்னிப்பு கடிதம் கொடுத்தவரை  எப்படி வீரர் என்று அழைப்பீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது அதிமுகவில் நடக்கிற பிரச்சினை என்பது நகைச்சுவை காட்சி அதை நாம் வேடிக்கை பார்த்து ரசிக்க வேண்டும் அது அவர்களுடைய கட்சி பிரச்சனை பெரிய நாட்டாமையிடம் பேசி அதற்கு அவர்கள் தீர்வு காணப்படுவர், அவ்வாறு அவர் கூறியுள்ளார்
 

click me!