காலியாகும் தினகரன் கூடாரம்...! பின்னணியில் சசிகலா... பரபரப்பு தகவல்..!

By Selva Kathir  |  First Published Mar 21, 2019, 9:46 AM IST

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறுவதன் பின்னணியில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது.


தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறுவதன் பின்னணியில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த போது தினகரனுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. வெற்றிவேல், பழனியப்பன் ,செந்தில் பாலாஜி என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தினகரன் பின்னால் அணி வகுத்தனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தினகரனுடன் இருந்து ஒவ்வொருவராக பிரிய ஆரம்பித்தனர். தினகரனின் மிகத் தீவிரமான ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத் கூட அவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். இதேபோல் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒருவர் என்று கூறப்பட்ட செந்தில் பாலாஜியும் கடந்த ஆண்டு திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளராகவும் ஆகிவிட்டார்.

Tap to resize

Latest Videos

 

இந்த நிலையில் சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கியமான நிர்வாகியும் பலம் வாய்ந்த நபராகவும் கருதப்பட்ட கலைராஜன் திமுகவில் இணைந்துள்ளார். தினகரனுக்கு கிட்டத்தட்ட வலதுகரமாக கலைராஜன் செயல்பட்டு வந்தார். சசிகலா மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியானது. அந்த சமயத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் நுழைந்தால் அவருடைய கை இருக்காது என்று பேட்டி கொடுத்து இதில் கிளப்பியவர் கலைராஜன்.

இந்த அளவிற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்ததோடு அவர்களின் உறவினராகவும் கூட கலைராஜன் இருந்து வந்தார். இந்த நிலையில் கலைராஜன் திடீரென திமுகவில் இணைந்து இருப்பதன் பின்னணியில் சசிகலா தினகரன் இடையிலான மோதல் இருப்பதாகக் கூறுகிறார்கள். கலைராஜன் மட்டுமல்லாமல் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தினகரன் கட்சியில் இணைந்து அதற்கு காரணம் சசிகலா என்கிறார்கள். ஆனால் தற்போது சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையிலான உறவு அவ்வளவு சுமூகமாக இல்லை. இதேபோல் தினகரனால் கட்சியை முன்புபோல் திறம்பட நடத்த முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். இதற்கு காரணம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பணப்புழக்கம் குறைந்ததே என்றும் பரவலாக பேச்சு நிலவுகிறது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை நடத்துவதற்கு சசிகலா தரப்பில் இருந்து எந்த உதவியும் செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவரங்கள் எல்லாம் தெரிந்துதான் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளார். இதே காரணத்திற்காகத்தான் தற்போது கலைராஜனும் தினகரனுக்கு டாட்டா சொல்லிவிட்டு ஸ்டாலினை சந்தித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலக பவர்களின் எண்ணிக்கை கலைஞர்களோடு முடிந்துவிடாது மேலும் பலர் திமுக மற்றும் அதிமுகவுடன் பேசி வருவதாகவும் தகவல்கள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.

click me!