மாவட்ட செயலாளர்கள் 4 பேர் ஓட்டம்... தனித்து போட்டியிடும் சரத்குமாருக்கு வந்த சோதனை..!

By Asianet TamilFirst Published Mar 21, 2019, 9:03 AM IST
Highlights

தேர்தலில் சரத்குமார் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த 4 மாவட்ட செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகி சரத்குமாருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்த நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் 2007-ம் ஆண்டில் கட்சியைத் தொடங்கினார். அதிமுக கூட்டணியில் 2011-ம் ஆண்டில் இடம் பெற்று தென்காசி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு தன் பலத்தை நிரூபிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதற்காக தேர்தலில் போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனுக்களையும் சரத்குமார் பெற்றார். இக்கட்சிக்கு தம்புல்ஸ் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இ ந் நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த 4 மாவட்டச் செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகி சரத்குமாருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள். கிச்சா ரமேஷ், தக்காளி முருகேசன், கிரிபாபு, குணசேகரன் ஆகிய மாவட்ட செயலாளர்கள் திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள். அவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ நேற்று கட்சி தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கூட வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துவிட்டது. ஆனால், 12 ஆண்டுகளாக கட்சி நடத்திவரும் சரத்குமாரால் வேட்பாளர் நேர்க்காணலைகூட நடத்தமுடியவில்லை. இன்னும் பிறரிடம் கையேந்தும் நிலையில்தான் கட்சி உள்ளது” என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
தேர்தல் நெருங்கிவரும் வேளையில், சரத்குமார் கட்சியிலிருந்து 4 மாவட்ட செயலாளர்கள் விலகி இருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!