வாட்ஸ் அப்பில் ராமதாசை அசிங்கப்படுதியவர் கைது !! நன்கு கவனித்த செங்கம் போலீஸ் !!

Published : Mar 21, 2019, 08:09 AM IST
வாட்ஸ் அப்பில் ராமதாசை அசிங்கப்படுதியவர் கைது !! நன்கு கவனித்த செங்கம் போலீஸ் !!

சுருக்கம்

பாமக நிறுவனர் ராமதாசை அவதூறாக விமர்சனம் செய்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டவரை போலீசார் கைது செயது சிறையில் அடைத்தனர். 

அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட யாரையும் அவதூறாக விமர்சனம் செய்து சமூக கலைதளங்களில் பதிவிடுவது தற்போது பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது. இதற்கு போலீசாரும் தடை விதித்துள்ளனர்.

ஆனாலும் சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சனம் செய்வது என்பது தற்போது அதிகரித்து வருகிறது. அதுவும் மீம்ஸ் வெளியிட்டு அரசியல் கட்சித் தலைவர்களையும், சினிமா நடிகர்களையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பரமனந்தல் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மகி . இவர் கடந்த திங்கட்கிழமை  பாமக நிறுவனர் ராமதாஸை அவதூறாக விமர்சித்து சமூக வலைதளத்தில் விடியோ  ஒன்றை வெளியிட்டார். . இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இதையடுத்து, விடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் பாமக நிர்வாகிகள் புகார் அளித்தனர். 

அதனடிப்படையில், செங்கம் டிஎஸ்பி குத்தாலிங்கம் தலைமையிலான போலீஸார், மகியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர், அவரை சிறையில் அடைத்து கவனித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!