நாளை வாக்குப் பதிவு. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 6 கோடி மதிப்பிலான தங்கம். விசாரணையில் திடீர் திருப்பம்

By Ezhilarasan BabuFirst Published Apr 5, 2021, 6:03 PM IST
Highlights

அதில் 150 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் 6 கோடி மதிப்பிலான சுமார் 40 கிலோ தங்கம் இருந்தது  இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பறக்கும் படை அதிகாரிகள் அது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 
 

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின்போது ஆறு கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நாளை  நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படையினர் உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினருடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா சிக்னலில் பிரங்க்ஸ் ஏடிஎம்  இயந்திரங்களுக்கு பாதுகாப்புடன் பணம் எடுத்துச்செல்லும் முகவர் வாகனத்தை மடக்கிப்பிடித்தை பறக்கும் படை அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் சோதனை செய்தனர். அதில் 150 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் 6 கோடி மதிப்பிலான சுமார் 40 கிலோ தங்கம் இருந்தது  இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பறக்கும் படை அதிகாரிகள் அது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 

பின்பு அது குறித்து விசாரணையின்போது சென்னை தி நகரில் உள்ள நகை பட்டறை இலிருந்து சவுகார் பேட்டையில் உள்ள தங்க வியாபாரிக்கு அந்த தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் கொண்டு செல்வதாக தெரிய வந்தது.  இதற்கு அவர்களிடம் உரிய ஆவணங்கள் இருந்ததால் பிடிப்பட்ட வெள்ளி மற்றும் தங்க கட்டிகளை அவர்களிடமே ஒப்படைத்து அனுப்பப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 

click me!