ஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே என் நேரு மீது வழக்குப்பதிவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 05, 2021, 05:51 PM IST
ஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே என் நேரு மீது வழக்குப்பதிவு...!

சுருக்கம்

பணப்பட்டுவாடா குறித்த வைரல் வீடியோ தொடர்பாக திமுக மேற்கு தொகுதி வேட்பாளர் கே என் நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தீயாய் இருந்த தமிழக தேர்தல் களம் நேற்று இரவு 7 மணியோடு பிரச்சாரம் நிறைவடைந்ததை அடுத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

ஏற்கனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, கரூர், திருவண்ணாமலை ஆகிய 5 தொகுதிகளில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகவும், அந்த தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில் உள்ள காவல் நிலையங்களில் தபால் வாக்குப் பதிவுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக ஏற்கனவே கே என் நேரு மீது குற்றச்சாட்டு எழுந்தது இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கே என் நேரு தன்னுடைய ஆதரவாளர்களுடன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.செய்ய நேரும் ஆபாசமாக பேசுவது பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முசிறி காவல்நிலையத்தில் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!