#BREAKING லாக்டவுனுக்கு தயாராகும் மத்திய அரசு? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

By vinoth kumarFirst Published Apr 5, 2021, 5:39 PM IST
Highlights

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

இந்நிலையில், ஏப்ரல் மாதம் 8ம் தேதி மாலை 6 மணியளவில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த முதல்வர்கள், ஆளுநர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, நாளை மாலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஷர்வர்தன் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அப்போது, ஒவ்வொரு மாநிலத்திலும், கொரோனா பரவல், தடுப்பூசி போடும் பணியை  விரிப்படுத்துவது தொடர்பாக உத்தரவிட வாய்ப்புள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும். தேவையான உதவிகளை மத்திய அரசு எந்த நேரமும் செய்ய தயாராக இருக்கிறது. மாநில எல்லைகளின் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசுகள் மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!