வரும் 8ம் தேதிக்கு பிறகு ஊரடங்கா..? அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

By Thiraviaraj RMFirst Published Apr 5, 2021, 5:25 PM IST
Highlights

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 8ம் தேதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கொரோனா தொற்றால் நாள் ஒன்றுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். நிலைமையை கட்டுக்குள் வைக்க சில மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.  

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8ந்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

click me!