அதிரடியாக தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.. அரவக்குறிச்சியில் போட்டியிட அனுமதிக்க கோரி போராட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 5, 2021, 5:48 PM IST
Highlights

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரவக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் வேட்பு மனு தாக்கலின் போது சட்டையில்லாமல் சென்றதால் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டதாக அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர் தெரிவித்ததாக கூறினார். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  50க்கும் மேற்பட்ட விவசாயிகள், அரவக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் விவசாயிகள் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை தலைமைச் செயலகத்தின் எதிரே உள்ள சாலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரவக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் விவசாயிகள் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் சந்தித்து கோரிக்கையை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு வைத்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரவக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் வேட்பு மனு தாக்கலின் போது சட்டையில்லாமல் சென்றதால் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டதாக அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர் தெரிவித்ததாக கூறினார். இந்நிலையில் இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் 26, அன்று தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு கொடுத்ததாக தெரிவித்தார். அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில், இன்று இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் விசாரித்தபோது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய கூறினார் என்று அய்யாகண்ணு தெரிவித்தார். 

எனவே நாளை தேர்தலை முன்னிட்டு விவசாயிகள் அரவக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை போட்டியிட அனுமதி அளிக்காத தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை கண்டித்து, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்தார். மேலும்  உடனே தங்களுக்கு அரவக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.  50 மேற்பட்ட விவசாயிகள் தலைமை செயலகத்தில் எதிரில் உள்ள சாலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


 

click me!