
சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதே சரியான தீர்வாகும் என்றும் என்றும் ஆட்சி அமைக்க அதிமுகவின் ஏதாவது ஒரு அணி திமுகவின் ஆதரவைக் கோர வாய்ப்புள்ளதாகவும் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டி வருகிறது. ஒ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்புக்குப் பிறகு, தனித்துவிடப்பட்ட டிடிவி தினகரன், தரப்பு கடும் அதிருப்திக்குள் ஆளாகி உள்ளது.
டிடிவி தினகரன் தரப்பு, எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இது தவிர எதிர்கட்சியான திமுக உள்ளிட்டவைகள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்தநிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதே சரியான தீர்வாகும் என்று கூறியுள்ளார்.
அப்பாடி வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், ஆட்சி அமைக்க அதிமுகவின் ஏதாவது ஒரு அணி திமுகவின் ஆதரவைக் கோர வாய்ப்புள்ளதாகவும் ஹெச். ராஜா கூறியுள்ளார்.