
டி.டி.வி.தினகரன் கூறியதைப்போல் தான் ஸ்லீப்பர் இல்லை என்றும், சசிகலா குறித்து தான் பேசியது பெரிதமாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
18 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதோடு அவர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
அதேநேரத்தில் இந்த 18 பேர் அல்லாமல் மேலும் சில ஸ்லீப்பர் செல் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் எடப்பாடி அணியில் இருப்பதாக தினகரன் கூறி வருகிறார்.
இந்நிலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நடராஜனைப் பார்க்க , சசிகலால பெங்களூரு சிறையில் இருந்தது , பரோலில் வந்துள்ளார். அவரை ஸ்லீப்பர் செல் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சந்திப்பார்கள் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக ஆட்சி அமைவதற்கு சசிகலாதான் காரணம் என தெரிவித்தார். இதனால் செல்லூர் ராஜு டி.டி.வி.தினகரன் கூறியதைப் போல் ஸ்லீப்பர் செல் என தகவல் பரவியது.
இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தினகரன் கூறியதைப் போல் , தான் ஸ்லீப்பர் செல் இல்லை என்றும், சசிகலா குறித்து தான் கூறிய கருத்து பெரிது படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிசாமி எளிமையான முதலமைச்சராக உள்ளார் என்றும் அவரது தலைமையின் கீழ் பணியாற்றுவேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.